ஒரே மாதத்தில் $10 மி. திரட்ட ஐந்து அமைப்புகள் இலக்கு

ஒரே மாதத்தில் $10 மி. திரட்ட ஐந்து அமைப்புகள் இலக்கு

1 mins read
9a6e6539-271f-4ba4-a297-b8d7800194b6
நன்கொடை திரட்டு நிகழ்ச்சியில் வர்த்தக சபைகளின் பிரதிநிதிகள். - படம்: சாவ் பாவ்

சிங்கப்பூரின் பல இனங்களையும் பிரதிநிதிக்கும் ஐந்து தொழிற்சபைகளும் சங்கங்களும் முதல்முறையாக ஒன்றாகச் சேர்ந்து ஒரே மாதத்திற்குள் $10 மில்லியன் தொகையைத் திரட்ட முடிவு செய்து இருக்கின்றன.

அடுத்த தலைமுறைத் தலைவர்களைப் பேணி வளர்த்து உருவாக்குவது இதன் நோக்கம்.

திரட்டப்படும் தொகை லீ குவான் இயூ நூற்றாண்டு நிதியில் சேரும். கல்வி உபகாரச் சம்பளங்கள், படிப்பு உதவித் தொகைகள், இளம் தலைவர்களைப் பேணி உருவாக்கும் செயல்திட்டங்கள் ஆகியவற்றுக்கு அந்த நிதி ஆதரவு அளிக்கிறது.

சிங்கப்பூர் சீன வர்த்தகத் தொழிற்சபை, சிங்கப்பூர் சீன குலவழிச் சங்கங்கள் கூட்டமைப்பு, சிங்கப்பூர் மலாய் வர்த்தகத் தொழிற்சபை, சிங்கப்பூர் இந்தியர் வர்த்தகத் தொழிற்சபை, யுரேஷிய சங்கம் ஆகியவை அந்த நிதியைத் திரட்டும்.

நிதி திரட்டும் முயற்சி வியாழக்கிழமை தொடங்கியது. அடுத்த மாதத்தில் அந்த அமைப்புகள் தங்களுடைய உறுப்பினர்களைக் கொண்ட கட்டமைப்புகளையும் பள்ளிக்கூடங்களையும் வர்த்தகச் சங்கங்களையும் சமூகப் பங்காளி அமைப்புகளையும் எட்டும். நன்கொடைகளைத் திரட்டும். அந்த அமைப்புகளின் இடங்களில் கையெழுத்திடும் புத்தகங்களும் வைக்கப்பட்டு இருக்கும்.

நன்கொடை திரட்டும் முயற்சி செப்டம்பர் 15 வரை நீடிக்கும். பிறகு நன்கொடைத் தொகையும் கையெழுத்துப் புத்தகங்களும் ஒரு நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் அளிக்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்