வாட்ஸ்அப்பில் கூடிய விரைவில் நுண்தெளிவு படங்களை அனுப்பலாம்

வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் கூடிய விரைவில் நுண்தெளிவுமிக்கப் புகைப்படங்களை அனுப்ப இயலுமென மெட்டா நிறுவனத் தலைமை நிர்வாகி மார்க் ஸக்கர்பர்க் வியாழக்கிழமை ஃபேஸ்புக்கில் அறிவித்தார்.

வாட்ஸ்அப் செயலியில் அடுத்த சில வாரங்களில் அறிமுகமாகவிருக்கும் புதிய அம்சம் எவ்வாறு இயங்கும் என்பதை விளக்கும் காணொளியையும் அவர் வெளியிட்டார்.

வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் வழக்கமான அல்லது நுண்தெளிவு தரத்தில் படங்களை அனுப்பலாம்.

நுண்தெளிவு தரத்தைத் தேர்ந்தெடுக்க, படத்தை அனுப்புவதற்குமுன் திரையில் மேற்பகுதியில் காணப்படும் “HD” விசையை அழுத்தி, தரத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

வாட்ஸ்அப் அண்மையில் அடுத்தடுத்து அறிமுகப்படுத்திவரும் புதிய அம்சங்களில் இதுவும் ஒன்று. சென்ற வாரம், காணொளி அழைப்புகளுக்குத் திரையைப் பகிரும் அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியது.

ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ் இரண்டிலும் கிடைக்கும் இந்த அம்சத்துடன், கூகல் மீட், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ், சூம் போல வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தலாம். இது கட்டம் கட்டமாக அறிமுகமாகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!