தீமிதித் திருவிழா பூர்வாங்க பூசைகள் ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடக்கம்

2 mins read
ceba5c81-63f5-4e31-b61d-d7c08f1ff77d
கடந்த ஆண்டின் தீமிதித் திருவிழாவில் தலைமைப் பண்டாரம் தலையில் சக்திக் கரகத்துடன் தீக்குழியைக் கடந்து சென்றார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டின் தீமிதித் திருவிழா நவம்பர் மாதம் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடைபெறும்.

தீமிதித் திருவிழா தொடர்பிலான பூர்வாங்க பூசைகள் ஆகஸ்ட் 21ஆம் தேதியிலிருந்து தொடங்கும். முதல் பூசையாக அன்றைய தினம் கொடியேற்றும் சடங்கு இடம்பெறும்.

தீமிதித் திருவிழாவின் நேர்த்திக் கடன்களான கும்பிடுதண்டம், அங்கபிரதட்சணம், பால்குடம், ஆண்கள் தீக்குழி இறங்குதல், பெண்கள் தீக்குழி சுற்றி வருதல் ஆகியவற்றுக்கான முன்பதிவு இணையம் வழி மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

இணையவழி முன்பதிவு செப்டம்பர் 25ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கும். நேர்த்திக் கடன்களுக்கான நேரடி ரசீது விற்பனை ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் இடம்பெறாது.

நவம்பர் 5ஆம் தேதி தீமிதித்தல் நாளன்று தீமிதிக்கும் ஆண் பக்தர்கள் தங்கள் பாத ஊர்வலத்தை கண்டிப்பாக சிராங்கூன் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்துதான் தொடங்க வேண்டும். அவர்கள் தீமிதிக்க ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு நேரடியாக வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆகஸ்ட் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் நவம்பர் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவிருக்கும் தீமிதித் திருவிழா தொடர்பான பல்வேறு சடங்குகளின் நேர்காணல்களை பக்தர்கள் இந்து அறக்கட்டளை வாரியத்தின் யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் கண்டு களிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

திமிதித் திருவிழா தொடர்பான ஆகக் கடைசி தகவல்களுக்கு பக்தர்கள் 62234064 எனும் எண்ணில் ஸ்ரீ மாரியம்மன் கோயிலைத் தொடர்புகொள்ளலாம் அல்லது கீழ்காணும் சமூக ஊடகத் தளங்களை நாடலாம்.

இணையத் தளம்: https://heb.org.sg/ அல்லது ஃபேஸ்புக்: facebookcom/hinduendowmentsboard

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்