நேரடி நன்கொடை வசூலிப்பை தற்காலிகமாக நிறுத்திய பள்ளிவாசல்

1 mins read
c8bbf87c-8a36-4736-a129-ebfafeccdeff
மின்னிலக்கத்தை நாடுமாறு கொடையாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிராங்கூன் நார்த் அவென்யூ 2ல் உள்ள பள்ளிவாசல் ஒன்று ரொக்கமாகக் கொடுப்பது உள்ளிட்ட கவுண்டர் மூலமான எல்லாவித (ஸகாத்) நன்கொடை வசூலிப்புகளையும் தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.

மஜித் அல் இஸ்டிகாமா பள்ளிவாசலில் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான சோதனையின்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சிலர் ரொக்கப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதை சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் கண்டறிந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மன்றம் தெரிவித்தது.

மேலும், நன்கொடை கடமைகளை நிறைவேற்ற விரும்புவோர் பள்ளிவாசலில் உள்ள SalamSG Pay சுயசேவை இயந்திரத்தைப் பயன்படுத்தலாம் அல்லது www.zakat.sg இணையத்தளத்தை நாடலாம் என்றும் மன்றம் கேட்டுக்கொண்டு உள்ளது.

ரொக்கமாக கவுண்டர் மூலம் நன்கொடை அளிக்க விரும்புவோர் அருகில் உள்ள வேறு பள்ளிவாசல்களை நாடலாம் என்றும் அது தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்