ஹஜ்ஜா பாத்திமா பள்ளிவாசலில் தேசிய தினக் கொண்டாட்டம்

1 mins read
2740142e-a4f5-478f-99d2-3d84b47d1138
ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கத்தின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கொண்டாட்டத்தில் உற்சாகமாக கலந்துகொண்டனர். - படம்: ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கம்

ஹஜ்ஜா பாத்திமா பள்ளிவாசலில் ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்க மத்ரஸா மாணவர்கள் ஆகஸ்ட் 14ஆம் தேதி சிங்கப்பூரின் 58வது தேசிய தினத்தைக் கொண்டாடினர்.

சங்கத்தின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் உற்சாகமாக கலந்துகொண்டு நாட்டுப்பண் பாடி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நாள்தோறும் மத்ரஸா நடைபெற்றாலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக மாணவர்கள் அதில் கலந்துகொள்கின்றனர்.

மாணவர்களுக்கு திருக்குர்ஆன் கற்பித்தலோடு, நீதி போதனைகள், பேச்சுப் போட்டி, விளையாட்டுகள் என மாணவர்களை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

குறிப்புச் சொற்கள்