வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் வீவக நகரங்களையும் பேட்டைகளையும் முதிர்ச்சியடைந்தவை, முதிர்ச்சியடையாதவை என்று இருவகைகளாக 1992ஆம் ஆண்டு பிரித்தது.
முதல்முறை வீடு வாங்குவோருக்கும் வீடு வேண்டி விண்ணப்பித்து பலமுறை தோல்வி கண்டோருக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு இணங்க நகரங்களும் பேட்டைகளும் இவ்வாறு பிரிக்கப்பட்டன.
மேம்பாட்டுக்கான நிலம் கிடைப்பதன் அடிப்படையில் அவை பிரிக்கப்பட்டன.
பொது வீடமைப்புக்கான நிலம் குறைவாக இருந்து, தேவை அதிகமாக இருக்கும் பேட்டைகள் முதிர்ச்சியடைந்தவை என்று குறிக்கப்பட்டன.
இந்தப் பேட்டைகளில் கட்டப்படும் பிடிஓ வீடுகள் பிரபலமானவையாகவும் அதிக தேவையைப் பிரதிபலிக்கும் வகையில் அதிக விலை கொண்டவையாகவும் இருக்கும்.
அதேநேரம் அதிக நிலப்பகுதிகள் மற்றும் குறைந்த வசதிகளுடன் மத்திய வட்டாரத்திற்கு அருகில் இல்லாத பேட்டைகள் முதிர்ச்சியடையாத பேட்டைகள் என்று வகைப்படுத்தப்பட்டன.
முதிர்ச்சியடைந்த பேட்டைகள்
1. அங் மோ கியோ
2. பிடோக்
தொடர்புடைய செய்திகள்
3. பீஷான்
4. புக்கிட் மேரா
5. புக்கிட் தீமா
6. மத்திய வட்டாரம்
7. கிளமெண்டி
8. கேலாங்
9. காலாங்/வாம்போ
10. மரின் பரேட்
11. பாசிர் ரிஸ்
12. குவீன்ஸ்டவுன்
13. சிராங்கூன்
14. தெம்பனிஸ்
15. தோ பாயோ
முதிர்ச்சியடையாத பேட்டைகள்
1. புக்கிட் பாத்தோக்
2. புக்கிட் பாஞ்சாங்
3. சுவா சூ காங்
4. ஹவ்காங்
5. ஜூரோங் ஈஸ்ட்
6. ஜூரோங் வெஸ்ட்
7. பொங்கோல்
8. செம்பவாங்
9. செங்காங்
10. தெங்கா
11. உட்லண்ட்ஸ்
12. ஈசூன்

