கொவிட்-19க்குப் பிறகு முதன்முதலாக நடத்தப்பட்ட சிங்கப்பூரின் தலைசிறந்த வாடிக்கையாளர் சேவை ஆய்வு 2023/2024ல் நன்கு பிரபலமான நிறுவனங்கள் வலுவான இடங்களைப் பிடித்துள்ளன.
ஹோட்டல்களும் விமான நிறுவனங்களும் அருமையாகச் செயல்பட்டுள்ளன.
தலைசிறந்த 10 பட்டியலில் மாண்டரின் ஓரியண்டல் சிங்கப்பூர் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ஷங்ரி-லா முதலிடத்தில் உள்ளது.
மாண்டரின் ஓரியண்டல் சிங்கப்பூர் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஓர் அறிவிப்பு விடுத்தது. $135 மில்லியன் மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளை ஒட்டி அந்த ஹோட்டல் ஆறு மாதம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
என்றாலும்கூட இரண்டாவது இடத்தை அது பிடித்தது.
கத்தார் ஏர்வேஸ் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
முந்தைய 2022ஆம் ஆண்டு ஆய்வில் 1,600க்கும் மேற்பட்ட நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல் இடத்தைப் பிடித்த டிசி அக்கோஸ்டிக் என்ற சிறிய ஒலிச்சாதன விநியோக உள்ளூர் நிறுவனம் இப்போது 7வது இடத்திற்கு இறங்கிவிட்டது.

