அதிபரின் பங்கு பற்றி பொதுமக்களைத் தவறாக வழிநடத்த வேண்டாம்: வேட்பாளர்களுக்கு நினைவூட்டல்

அதிபரின் பங்கு பற்றி பொதுமக்களைத் தவறாக வழிநடத்த வேண்டாம்: வேட்பாளர்களுக்கு நினைவூட்டல்

1 mins read
613e7731-f5a3-4e0f-9949-e24dbcfa9de0
-

அதிபரின் பங்கு பற்றி பொதுமக்களைத் தவறாக வழிநடத்த வேண்டாம் என்று தேர்தல் துறையும், தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் வேட்பாளர்களுக்கு வியாழக்கிழமை நினைவுபடுத்தின.

திரு டான் கின் லியன் ஒளிபரப்புக்குச் சமர்ப்பித்த உரையில் சில பிழைகள் இருந்ததைச் சுட்டிக்காட்டி தேர்தல் துறையும் ஆணையமும் வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த நினைவூட்டல் இடம்பெற்றது.

காப்புநிதிகளின் முதலீட்டு உத்திகளுக்கு அதிபர் வழிகாட்ட முடியும் என்றும், அரசாங்கக் கொள்கையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்த முடியும் என்றும் திரு டானின் உரையில் கூறப்பட்டிருந்தது.

“இதுபற்றி தெரியப்படுத்தியவுடன், திரு டானின் தேர்தல் முகவர் எந்த எதிர்ப்புமின்றி அவற்றைத் திருத்தினார்,” என அறிக்கை தெரிவித்தது.

அதிபர் வேட்பாளர்களின் முதல் ஒளிபரப்புக்குச் சமர்ப்பித்த உரையிலிருந்து மூன்று பத்திகளை ஆணையம் நீக்கியதை திரு டான் குறை கூறியதைத் தொடர்ந்து, கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

ஒளிபரப்பின் நேரமும் விதிமுறைகளும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வேட்பாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்பில் ஆகஸ்ட் 21ஆம் தேதி விளக்கவுரையும் நடத்தப்பட்டதாகக் கூட்டறிக்கை தெரிவித்தது.

அதிபரின் பங்கு பற்றிய விளக்க அறிக்கையைப் படித்துப் பார்த்ததாக, வேட்பாளர்கள் மூவரும், தங்களது வேட்புமனுவில் சட்டபூர்வ உறுதியளித்து கையொப்பம் இட்டதாகவும் தேர்தல் துறையும் ஆணையமும் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்