கேலாங் சாலையில் திங்கட்கிழமை காலை நிகழ்ந்த கைகலப்பு தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சண்டை குறித்து அதிகாலை 1.44 மணி அளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தும் கைகலப்பில் ஈடுபட்டோர் அடையாளம் காணப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 23 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்கள் புதன்கிழமையன்று கைது செய்யப்பட்டனர்.
சண்டையில் இரண்டு ஆடவர்களுக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டன.
அந்த நால்வர் சண்டை போடுவதையும் அவர்களை விலக்கிவிட மற்றவர்கள் முயற்சி செய்வதையும் காட்டும் காணொளி சமூக வலைத்தளத்தில் வலம் வந்தது.
சண்டை குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவதைக் காட்டும் காணொளியும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
சண்டை போட்டதாக நான்கு ஆடவர்கள் மீது வியாழக்கிழமையன்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனை, அதிகபட்சம் $5,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

