புராபர்ட்டிகுருவுக்கு $6.5 மில்லியன் இழப்பு

1 mins read
890dc3dd-c2ed-4a54-9143-c55b5a29ed2b
சிங்கப்பூர் சொத்துச்சந்தையில் புராபர்ட்டிகுருவின் வருமானம் உயர்ந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புராபர்ட்டிகுரு நிறுவனத்துக்கு இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் $6.5 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், இரண்டாம் காலாண்டில் அதன் வருமானம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11.7 விழுக்காடு உயர்ந்து $36.9 மில்லியனாகப் பதிவானது.

கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் அது $3.8 மில்லியன் வருமானம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் சொத்துச்சந்தை மூலம் புராபர்ட்டிகுருவுக்கு ஆக அதிகமான வருமானம் கிடைத்தது. உள்ளூர் சொத்துச்சந்தை மூலம் கடந்த ஆண்டு அது $17.3 மில்லியன் வருமானம் ஈட்டியது.

இது இவ்வாண்டு $21.5 மில்லியனாக அதிகரித்துள்ளது.

வியட்னாம் சொத்துச்சந்தையில் மட்டுமே புராபர்ட்டிகுருவின் வருமானம் சரிந்தது.

வியட்னாமில் சொத்துச்சந்தை நிலவரம் இவ்வாண்டு மேம்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்