தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

11 வயது சிறுவனை பள்ளி அறையில் மானபங்கம் செய்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்

2 mins read
6d8fb75b-a067-44aa-b4a6-4314056ccfac
நீதிமன்றம் - கோப்பும் படம்

தொடக்கப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றியபோது 11 வயது மாணவனை மானபங்கம் செய்த 44 வயது ஆடவர், ஐந்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நீதிபதி வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். சிறுவனின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக ஆடவரின் பெயர் வெளியிடப்படவில்லை.

அவர் 2017 நவம்பர் மாதத்திற்கும் 2018 அக்டோபர் மாதத்திற்கும் இடையில், பள்ளியிலிருந்த துறைத் தலைவர் அறையில் சிறுவனை ஐந்து முறை மானபங்கம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்தக் குற்றச்சாட்டுகளை ஆடவர் மறுத்தார். ஆனால், அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் சந்தேகத்திற்கு இடமின்றி எல்லாக் குற்றச்சாட்டுகளையும் நிரூபித்ததாக நீதிபதி கூறினார்.

சிறுவன், அவனது உறவினர்கள், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் உட்பட பலர் இவ்வழக்கில் சாட்சியம் அளித்தனர்.

சிறுவன் குழந்தையாக இருந்தபோதே அவனது பெற்றோர் பிரிந்துவிட்டனர். அவனது தாத்தா பாட்டி, கொள்ளுப்பாட்டி உட்பட பலர் அவனைப் பல்வேறு காலகட்டங்களில் கவனித்துக் கொண்டனர்.

சிறுவன் 2016ல் வேறொரு தொடக்கப்பள்ளிக்கு மாறிச்சென்றபோது, அந்த ஆடவரின் பொறுப்பிலிருந்த இணைப்பாட நடவடிக்கையில் சேர்ந்தான். மறு ஆண்டு, தனது குடும்பப் பிரச்சனைகளை ஆசிரியருடன் பகிரத் தொடங்கினான் அச்சிறுவன்.

பின்னர் ஆடவர் அவனை மானபங்கம் செய்யத் தொடங்கினார். சிறுவனின் பிறந்தநாளுக்கு அவனை வெளியில் அழைத்துச் சென்று மிதிவண்டி வாங்கித்தர ஆடவர் ஏற்பாடு செய்திருந்தபோது, சிறுவனின் சகோதரன் உண்மையைக் கண்டுபிடித்தான்.

இந்த வழக்கின்போது, சாட்சிகளுக்குப் பல்வேறு தகவல்களை அனுப்பி நீதிக்கு இடையூறு விளைவிக்க ஆடவர் முயன்றதாக அரசாங்கத்தரப்பு வழக்கறிஞர் கூறினார். அரசாங்கத்தரப்பு சாட்சியான பள்ளி முதல்வருக்கும் அவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

அவருக்கு அடுத்த வாரம் தண்டனை விதிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்