ப்ருக்‌ஸ்மா நடத்தும் மொழிபெயர்ப்பு பயிற்சி

1 mins read
f9cc36c3-d400-484f-9ad8-061737dd5ddd
திரு தாமஸ் ஹிடோஷி ப்ரூக்ஸ்மா. - படம்: சிங்கப்பூர் புத்தக மன்றம்

சிங்கப்பூர் புத்தக மன்றம் திரு தாமஸ் ஹிடோஷி ப்ரூக்ஸ்மாவைத் தன் முதல் உடனிருந்து பயிற்றுவிக்கும் மொழிபெயர்ப்பாளராக செப்டம்பரில் வரவேற்கவுள்ளது. இந்த உடனிருந்து மொழிபெயர்ப்புத் திட்டம் தேசிய கலை மன்றத்தால் ஆதரிக்கப்படுகிறது.

திரு ப்ரூக்ஸ்மா எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆசிரியர், கலைஞர், போன்ற பல முகங்களைக் கொண்டவர். அமெரிக்காவைச் சார்ந்த இவரின் தனித்துவம், தமிழ், ஸ்பானிய மொழிகளிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பதே ஆகும். தமிழிலக்கியத்தின் உச்ச படைப்புகளான ஒளவையாரின் கவிதைகளையும் திருக்குறளையும் (“குறள்: திருவள்ளுவரின் திருக்குறள்” என்ற தலைப்பில்) மொழிபெயர்த்து நூல்களாக வெளியிட்டுள்ளார். பரவலாக பேசுவது, நிகழ்ச்சி நடத்துவது மட்டுமன்றி, ‘கோசி கிராமர்’ இணைய காணொளிப் பயிற்சி வகுப்புகளிலும் பயிற்றுவிக்கிறார். கலை, கலாச்சாரம், கலைஞர் தேசிய அறக்கட்டளை நிதியிடமிருந்தும் அமெரிக்க ஃபுல்ப்ரைட் திட்டத்திடமிருந்தும் ஆதரவூதியங்களும் மானியங்களும் பெற்றிருக்கிறார்.

அவர் செப்டம்பர் 23 முதல் 30 வரை சிங்கையில் வாரம் முழுதும் வகுப்புகள், வாசிப்புகள், போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். இறுதியில், 30 செப்டம்பர் அன்று அவர் ஆண்டுதோறும் நடக்கும் சிங்கப்பூர் மொழிபெயர்ப்பு கருத்தரங்கில் ஒரு விரிவுரையையும் நிகழ்த்துவார்.

அவரது விரிவுரையைத் தவிர, மற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் இலவசமே. அவற்றுக்குப் பதிவுசெய்ய https://www.bookcouncil.sg/sbc-academy/translation-programmes/sbc-translator-residency இணையப்பக்கத்தை அணுகலாம்.

திரு ப்ரூக்ஸ்மா பிப்ரவரி முதல் மே 2024 வரை ஓர் இணைய வழிகாட்டல் திட்டத்திலும் பங்கேற்று, வளர்ந்துவரும் தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஆதரவும் வழங்குவார். இதற்கான பதிவு வரும் நாட்களில் தொடங்கும்.

குறிப்புச் சொற்கள்