அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் வருடாந்திர ஹைட்ரஜன் கார் பந்தயம் (H2GP) செப்டம்பர் 11 முதல் 14 வரை நடக்க இருக்கிறது.
தெமாசெக் பலதுறை தொழிற்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று அந்தப் பந்தயத்தில் கலந்துகொள்ளும் கார் ஒன்றை உருவாக்கி இருக்கிறது.
ஐந்து முதலாம் ஆண்டு மாணவர்கள் கடந்த மே முதல் ஹைட்ரஜனில் ஓடும் கார் ஒன்றை குறைந்த எடை உள்ள பகுதிப் பொருள்களைக் கொண்டு உருவாக்கி வந்தனர்.
அதை வானொலி சாதனத்தைக் கொண்டு தொலைவில் இருந்தபடி கட்டுப்படுத்தலாம். லாஸ் வேகாஸ் போட்டியில் முதன்முதலாக சிங்கப்பூர் இப்போது கலந்துகொள்ளப்போகிறது.
பந்தயத்தில் 13 நாடுகளைச் சேர்ந்த இதர 27 குழுக்களின் ஹைட்ரஜன் கார்களும் கலந்து கொள்ளும்.
முதல் போட்டி இரண்டு மணி நேரம் நடக்கும் தகுதிச் சுற்று போட்டியாகும். அதன் மூலம் 15 குழுக்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு அவை ஆறு மணி நேரம் நடக்கும் இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளும்.

