பல்வேறு, வெவ்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிங்கப்பூர் நிறுவனமான அம்பைட் மீதும் அதன் இயக்குநர் மீதும், நிறுவனம் நிறுவப்பட்டு வெறும் ஐந்து மாதங்களில் குற்றச் செயல்கள் மூலம் கிடைத்த $2.2 மில்லியனுக்கும் அதிகமான தொகையை வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஊழல், போதைப்பொருள் கடத்தல், மற்ற கடுமையான குற்றங்கள் சட்டத்தின்கீழ் அந்த நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதன் வங்கிக் கணக்கில் $2 மில்லியனுக்கும் அதிகமான தொகை இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தப் பணம் எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து தெரிவிக்க அது தவறிவிட்டது.
அதுமட்டுமல்லாது, அம்பைட் நிறுவனத்தின் இயக்குநரான 35 வயது அல்சன் டோங் ஷாவ் தியன் மீது மேலும் ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
நிறுவனத்தின் பணப் பரிவர்த்தனைகளை அவர் முறையாகக் கண்காணிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

