மிரட்டிப் பணம் பறித்தல்: பெண்ணுக்கு எச்சரிக்கை

1 mins read
725009b3-13e0-4d96-9460-e7968a8e5745
தன்யா பால் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டன. - படம்: தமிழ் முரசு

விலைமாதர் சேவை வழங்கியதாகவும் மிரட்டிப் பணம் பறித்ததாகவும் 27 வயது தன்யா பால் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதே குற்றச்சாட்டை அவர் மீது மீண்டும் சுமத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்த காரணம் தெரிவிக்கப்படவில்லை.

மிரட்டிப் பணம் பறித்ததாக கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதியன்று தன்யா மீது குற்றம் சாட்டப்பட்டது.

அந்தக் குற்றத்தை அவர் மார்ச் 5ல் ஈசூனில் உள்ள அடுக்குமாடி வீட்டில் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தம்மிடம் $1,800 கொடுக்காவிட்டால் காவல்துறையிடம் புகார் செய்யப்போவதாக 39 வயது ஆடவரை தன்யா மிரட்டியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மிரட்டல் குறித்த விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.

மிரட்டிப் பணம் பறிக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.

பெண்களுக்குப் பிரம்படி விதிக்கப்படாது.

குறிப்புச் சொற்கள்