அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான டான் கின் லியான், 75, தனக்கு வாக்களிக்கும்படி சிங்கப்பூரர்களை இறுதிக்கட்ட பிரசாரத்தில் கேட்டுக்கொண்டார்.
தனக்கு வாக்களிப்பதால் நம்பிக்கை மீட்டெடுக்கப்படும். மக்களிடம் நம்பிக்கை பிறக்கும் என்று அவர் தெரிவித்தார்.
என்டியுசி இன்கம் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியான திரு டான், அந்தக் காப்புறுதி நிறுவனத்தில் நிதி நிர்வாகத் துறையில் தான் சாதித்து இருக்கும் சாதனைகளை வலியுறுத்திக் கூறினார்.
‘‘அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அதிபர் என்ற முறையில் சிங்கப்பூரர்களின் நல்வாழ்வுக்குப் பாடுபடுவேன்.
‘‘என்னுடைய நலத்தைவிட மக்களின் நலனையே பெரிதாகக் கருதுவேன். இதன்மூலம் அனைவருக்கும் சிறந்த வாழ்க்கையை ஏற்படுத்த உதவுவேன்,’’ என்று புதன்கிழமை அவர் தனது பிரசாரத்தில் தெரிவித்தார்.
நாட்டின் சேமிப்பை பாதுகாக்க அறிவும் அனுபவமும் தேவை;
சாதாரண பாமர மனிதனின் தேவைகளைப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம்;
முன்பு தான் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவுகளில் எதையாவது ஏற்புடையதன்று என்று யாராவது கருதி இருப்பார்களேயானால் அவர்களிடத்தில் மன்னிப்பு;
தொடர்புடைய செய்திகள்
அரசாங்கத்துடன் செயல்பட்டு மக்களுடைய கருத்துகளை அரசாங்கத்திடம் எடுத்துரைத்து மக்களின் வாழ்க்கையைச் சிறந்ததாக மாற்ற வழி காண்பது ஆகிய நான்கு அம்சங்களும் திரு டானின் இறுதிக்கட்ட பிரசாரத்தில் முக்கிய அங்கங்களாக இருந்தன.

