இங் கொக் சொங்: நான் மட்டுமே அரசியல் சாராத ஒரே வேட்பாளர்

இங் கொக் சொங்: நான் மட்டுமே அரசியல் சாராத ஒரே வேட்பாளர்

2 mins read
9eeab626-5c82-42f8-a595-e1bf60276a9b
அதிபர் தேர்தலில் போட்டியிடும் இதர இரண்டு வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளுடன் அணுக்கத் தொடர்புடையவர்கள் என்று இங் கொக் சொங் இறுதிக்கட்ட பிரசாரம் செய்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

அதிபர் தேர்தலில் அரசியல் கட்சி சாராத வேட்பாளர் தான் ஒருவர் மட்டுமே என்று அத்தேர்தலில் போட்டியிடும் இங் கொக் சொங் தனது இறுதிக்கட்ட பிரசாரத்திலும் தெரிவித்தார்.

தனக்கு வாக்களித்து அதன்மூலம் அரசமைப்புச் சட்டத்தின் எழுச்சியை நிலைநாட்டும்படி சிங்கப்பூரர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

சிங்கப்பூரின் அதிபர் அரசியல் கட்சியைச் சாராதவராக இருக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறது.

இருந்தாலும்கூட அரசியல் தலைவர்கள் தங்களுடைய கட்சியில் இருந்து விலகிக்கொண்டு ஒரு சில மாதங்களுக்குப் பிறகே கூட தேர்தலில் போட்டியிட இப்போதைய அதிபர் தேர்தல் முறை அனுமதித்து இருக்கிறது என்று ஜிஐசி நிதியத்தின் முன்னாள் முதலீட்டுத் துறை தலைமை அதிகாரியான திரு இங் தெரிவித்தார்.

அதிபர் தேர்தலில் போட்டியிடும் இதர இரண்டு வேட்பாளர்களில் ஒருவரான முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், என்டியுசி இன்கம் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி டான் கின் லியான் இருவரும் அரசியல் கட்சிகளுடன் அணுக்கத் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

‘‘அந்த இருவரில் ஒருவர் அரசாங்கத்தில் இருந்தும் ஆளும் கட்சியில் இருந்தும் சில மாதங்களுக்கு முன்புதான் விலகிக்கொண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்.

‘‘மற்றொரு வேட்பாளருக்கான பிரசாரத்தில் எதிர்த்தரப்பு தலைவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

‘‘நான் மட்டும்தான் அரசியல் கட்சியைச் சாராத வேட்பாளர். எந்தவோர் அரசியல் கட்சியோடும் எந்தவொரு காலத்திலும் நான் சேர்ந்து இருந்தது கிடையாது,’’ என்று திரு இங், 75, பிரசாரம் செய்தார்.

அரசியல் சாராத அதிபரைக் கொண்டிருப்பது முக்கியமானது; சிங்கப்பூரில் அரசியல் மிகவும் போட்டி நிறைந்ததாக ஆகி இருக்கிறது. இதனால் தவறான ஒரு குழு பொறுப்புக்கு வந்துவிடக்கூடிய ஆபத்து அதிகரித்து இருக்கிறது;

அரசமைப்புச் சட்ட உணர்வை தூக்கிப்பிடிக்கக்கூடிய காலம் கனிந்து இருக்கிறது;

அரசியல் சாராத ஆற்றல்மிகுந்த சிங்கப்பூரர்களுக்கு விசுவாசமான வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னுதாரணமாக தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் ஆகிய நான்கு அம்சங்களும் திரு இங்கின் கடைசிக்கட்ட பிரசாரத்தில் குறிப்பிடத்தக்கவையாக இருந்தன.

குறிப்புச் சொற்கள்