மறுவடிவமைக்கப்பட்ட ஏழு அக்கம்பக்க காவல்துறை சாவடிகள் இரண்டு மாதம் தாமதமாகத் திறக்கப்படும். புதுப்பிப்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டு இருப்பதே காரணம்.
கிளமெண்டி, டோவர், தாம்சன், அல்ஜுனிட், பாய லேபார், பிடோக், சங்காட் ஆகிய அக்கம்பக்க காவல்துறை சாவடிகள் அவை.
அவை புதுப்பிப்புப் பணிக்காக சென்ற ஆண்டு செப்டம்பரில் மூடப்பட்டன. செப்டம்பர் மாதம் அந்தச் சாவடிகள் திறக்கப்பட இருந்தன. ஆனால் நவம்பரில்தான் அவை மீண்டும் திறக்கப்படும்.
புதுப்பிப்புப் பணி நடக்கும் காலத்தில் காவல்துறை சேவைகளை நாடுவோர் பக்கத்தில் இருக்கும் அக்கம்பக்கச் சாவடிக்கு அல்லது காவல் நிலையத்திற்குச் செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். police.gov.sg/e-services என்ற முவகரியிலும் இணைய சேவைகளைப் பெறலாம்.
அவசர காவல்துறை உதவி தேவை எனில் 999 என்ற எண்ணை உடனடியாக அழைக்க வேண்டும்.

