எரிபொருள் விலை மாற்றத்தை உடனுக்குடன் அறிய புதிய வசதி

எரிபொருள் விலை மாற்றத்தை உடனுக்குடன் அறிய புதிய வசதி

1 mins read
7fb392af-b0eb-4b25-affb-11ae0e1d6e07
‘பிரைஸ் காக்கி’ கைப்பேசிச் செயலி வாயிலாக எரிபொருள் விலை மாற்றத்தை அறிந்துகொள்ளலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வாகன ஓட்டுநர்கள் எரிபொருள் விலைகளின் மாற்றத்தை இனிமேல் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். அதற்கேற்ற வகையில் ‘பிரைஸ் காக்கி’ கைப்பேசிச் செயலியில் ‘ஃபுயூவல் காக்கி’ என்னுன் அம்சம் சேர்க்கப்பட்டு உள்ளது.

பிரைஸ் காக்கி செயலியின் உரிமையாளரான சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் வியாழக்கிழமை இது பற்றி அறிவித்தது.

சிங்கப்பூரில் உள்ள ஐந்து பெரிய எரிபொருள் விநியோக நிறுவனங்களான ஷெல், கால்டெக்ஸ், எஸ்ஸோ, சினோபெக் மற்றும் எஸ்பிசி ஆகியவற்றின் விலைகளில் ஏற்படும் அந்தச் செயலியில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

ஏற்கெனவே 2020ஆம் ஆண்டு தான் தொடங்கிய ஃபியுவல் காக்கி இணையத்தளத்தில் உள்ள அம்சங்களின் அடிப்படையில் செயலியில் எரிபொருள்களின் புதிய சில்லறை விலை பகுதி சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் அது தனது அறிக்கையில் தெரிவித்தது.

வெவ்வேறு எரிபொருள் விநியோக நிறுவனங்களின் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை வாகன ஓட்டுநர்கள் ஒப்பிட்டுப் பார்க்க ஃபியுவல் காக்கி இணையத்தளம் உதவுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்