தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காப்பிக்கடையில் தீ; ஒருவருக்கு இலேசான காயம்

1 mins read
29143b8e-1a03-44fc-a529-f9ee60a1292e
இரண்டு மாடிக் கட்டடத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அணைத்தது. - படம்: டிக்டாக்  

ஈசூனில் உள்ள ஒரு காப்பிக்கடையில் வியாழக்கிழமை விடிகாலை நேரத்தில் தீ மூண்டதில் ஒருவருக்கு இலேசான தீப்புண் ஏற்பட்டது. அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார். 19 பேர் தாங்களாகவே அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட்டனர்.

ஈசூன் ஸ்திரீட் 81ல் உள்ள புளோக் 848ன் முதல் மாடியில் அமைந்து இருக்கும் அந்தக் காப்பிக்கடை சென்ற ஆண்டு ஜூன் மாதம் சாங் செங் குரூப் என்ற நிறுவனத்திற்கு $40 மில்லியன் விலைக்கு விற்கப்பட்டது.

தீ விபத்து பற்றி கருத்து கூறிய சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, அந்தக் காப்பிக்கடையின் ஒரு சமைலறையில் மூண்டிருந்த தீயை தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அணைத்ததாகத் தெரிவித்தது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து புலன்விசாரணை நடந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்