அதிபர் தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 85% வாக்குப் பதிவு

1 mins read
887307e9-61dd-4fa8-affd-52bb28de3089
புளோக் 625பி, செஞ்சா ரோட்டில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில், காலையில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதிபர் தேர்தலை முன்னிட்டு சிங்கப்பூர் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1,264 வாக்களிப்பு நிலையங்களில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 1) காலை 8 மணி முதல் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.

மாலை 5 மணி நிலவரப்படி, கிட்டத்தட்ட 85 விழுக்காட்டு வாக்காளர்கள் அதாவது 2,302,996 பேர் வாக்களித்துவிட்டதாகத் தேர்தல் துறை தெரிவித்துள்ளது.

இரவு 8 மணிக்குள் வாக்களிக்கும்படி வாக்காளர்களுக்கு அது நினைவுறுத்தியது.

நாட்டின் ஒன்பதாவது அதிபரைத் தேர்ந்தெடுக்க, சிங்கப்பூரர்கள் வாக்களித்து வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஜூரோங் குடியிருப்பாளர் திரு எஸ் (அவர் அளித்த தகவலின்படி), சக்கர நாற்காலியில் அமர்ந்து தன் மனைவியுடன் புளோக் 307, ஜூரோங்  ஈஸ்ட் ஸ்திரீட் 32ல் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களித்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஜூரோங் குடியிருப்பாளர் திரு எஸ் (அவர் அளித்த தகவலின்படி), சக்கர நாற்காலியில் அமர்ந்து தன் மனைவியுடன் புளோக் 307, ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 32ல் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தாதிமை இல்லங்களில் வசிப்போர், மருத்துவமனை நோயாளிகள், முதல்முறை வாக்களிப்போர், பணி ஓய்வு பெற்றோர், முதியோர், புத்த பிக்குகள் எனப் பல்வேறு தரப்பினர் வாக்களிக்கச் சென்றதைக் காண முடிந்தது.

குறிப்புச் சொற்கள்