மாதிரி வாக்கு எண்ணிக்கையில் 70% வாக்குகள் பெற்று தர்மன் முன்னிலை

மாதிரி வாக்கு எண்ணிக்கையில் 70% வாக்குகள் பெற்று தர்மன் முன்னிலை

1 mins read
c2c2c645-538f-43f3-bf45-2ad64ed411c5
தர்மன் சண்முகரத்னம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் அதிபர் தேர்தலின் மாதிரி வாக்கு எண்ணிக்கையில் திரு தர்மன் சண்முகரத்னம் 70 விழுக்காடு வாக்குகளுடன் முன்னிலை பெற்றார்

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திரு இங் கொக் சொங்கிற்கு 16 விழுக்காடு வாக்குகளும் திரு டான் கின் லியானுக்கு 14 விழுக்காடு வாக்குகளும் கிடைத்தன.

வாக்குப்போக்கு குறித்து அறிந்துகொள்ள ஏதுவாக, மாதிரி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது, ஊகத் தகவல்களும் அதிகாரபூர்வமற்ற தரப்புகளிலிலிருந்து தவறான தகவல்களும் வெளியாவதைத் தடுக்கும் நோக்கில், மாதிரி வாக்கு எண்ணிக்கை இடம்பெற்றது.

அதன்படி, ஒவ்வொரு வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளிலிருந்தும் 100 வாக்குச்சீட்டுகள் எடுக்கப்பட்டு, அவை முதலில் எண்ணப்பட்டன. வேட்பாளர்கள் முன்னிலையிலும் அவர்களின் முகவர்கள் முன்னிலையிலும் அவை எண்ணப்பட்டு, மாதிரி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

மாதிரி வாக்கு எண்ணிக்கை முடிவுகளும் இறுதி முடிவுகளும் ஏறக்குறைய 95 விழுக்காடு ஒத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.