கடந்த வாரம் நடைபெற்ற சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் மகத்தான வெற்றிபெற்ற திரு தர்மன் சண்முகரத்னத்திற்கு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வாழ்த்துத் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக திரு அன்வார், ஞாயிற்றுக்கிழமை ஃபேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
திரு தர்மனின் தலைமைத்துவத்தின்கீழ் சிங்கப்பூர் தொடர்ந்து வளமடையும் என்று தாம் நம்புவதாக அந்தப் பதிவில் மலேசியப் பிரதமர் குறிப்பிட்டு உள்ளார்.
“இரு நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான உறவும் ஒத்துழைப்பும் ஒரு குடும்ப உணர்வோடு தொடர நான் பிரார்த்திக்கிறேன்.
“சிங்கப்பூர் குடியரசின் புதிய அதிபராகப் பதவி ஏற்க இருக்கும் தர்மன் சண்முகரத்னத்துக்கு எனது வாழ்த்துகள்,” என்றும் திரு அன்வார் தெரிவித்து உள்ளார்.