கோழிக்குஞ்சை காப்பாற்ற கால்வாய்க்குள் இறங்கிய மூவர்

கோழிக்குஞ்சை காப்பாற்ற கால்வாய்க்குள் இறங்கிய மூவர்

1 mins read
e8b8625e-b363-40b7-912b-75cd318df9b2
படம்: - டிக்டாக்

ஈசூன் கால்வாயில் தவறி விழுந்த கோழிக்குஞ்சை கால்வாய்க்குள் இறங்கி மூன்று பேர் காப்பாற்றியுள்ளனர்.

இந்த நிகழ்வு ஈசூன் அவென்யூ 4 அருகே நடந்தது. கால்வாய் ஈசூன் சாஃப்ரா அருகே உள்ளது.

அதுதொடர்பான காணொளியும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

காணொளியில் கோழிக்குஞ்சு பயந்து கால்வாய்க்குள் ஓடுவதும், அதைக் காப்பாற்ற சிலர் ஓடுவதும் பதிவாகியிருந்தது.

முதலில் சாம்பல் நிறச் சட்டை அணிந்த ஆடவர் கால்வாய்க்குள் இறங்கி காப்பாற்ற முயன்றார்.

ஆனால், அவரால் கோழிக்குஞ்சின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

அதைத்தொடர்ந்து, பச்சை நிறச் சட்டை அணிந்த ஆடவர் கோழிக்குஞ்சைப் பிடிக்க கால்வாய்க்குள் இறங்கினார்.

ஆடவர் இருவர் கால்வாய்க்குள் இறங்கி கோழிக்குஞ்சைக் காப்பாற்றுவதைக் காண மக்களும் கூடினர்.

இதைக் கண்ட மற்றொருவரும் கால்வாய்க்குள் இறங்கினார்.

கால்வாயில் நீர் அதிகமில்லை என்றபோதும், ஈரமாக இருந்ததால் ஆடவர்கள் அதில் நடக்க தடுமாறியது காணொளியில் பதிவாகியிருந்தது.

கடைசியில் ஒரு வழியாக ஆடவர்கள் கோழிக்குஞ்சைப் பத்திரமாக மீட்டு வெளியேவிட்டனர்.

ஆடவர்கள் கோழிக்குஞ்சைப் பிடித்ததும் சுற்றி இருந்த மக்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

குறிப்புச் சொற்கள்