முன்னாள் வங்கியாளர் ரோஜர் இங்குக்கு வாழ்நாள் தடை

மலேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 1எம்டிபி நிதி மோசடி விவகாரத்தில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியதற்காக கோல்ட்மேன் சாக்ஸின் முன்னாள் வங்கியாளர் ரோஜர் இங் குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து சிங்கப்பூர் நாணய ஆணையம் அவருக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது.

அவருக்கு எதிரான வாழ்நாள் தடை உத்தரவு செவ்வாய்க்கிழமையிலிருந்து நடப்புக்கு வந்தது.

இதனால் இங், வழக்கமான நிதி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. நிதி தொடர்பான ஆலோசனைகளையும் அவர் வழங்க முடியாது.

இங் சோங் ஹுவா என்று அழைக்கப்படும் மலேசியரான அவர், நிறுவனத்தின் இயக்குநராகவோ பங்குதாரராகவோ சிங்கப்பூரில் சட்டப்படி செயல்பட அனுமதியில்லை.

கடந்த மார்ச் மாதம் நியூயார்க் நீதிமன்றம் இங்குக்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டளை விதித்தது.

முன்னாள் கோல்ட்மேன் தலைவர் டிம் லீஸ்னர் மற்றும் மலேசிய நிதியாளர் ஜோ லோ ஆகியோருடன் சேர்ந்து பல பில்லியன் டாலர் மோசடி தொடர்பாக அவர் கூட்டு சதியில் ஈடுபட்டதாக நீதிமன்றம் கூறியது.

இதற்கு லஞ்சமாக அவர் பல மில்லியன் டாலர் பெற்றுக் கொண்டதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சிங்கப்பூர் நாணய ஆணையம் அவருக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

“இங்கின் தவறான நடத்தையால் சிங்கப்பூரில் அவர் வர்த்தகத்தில் ஈடுபட அனுமதிப்பது பொதுநலனுக்கு எதிரானது என்று சிங்கப்பூர் மத்திய வங்கி நம்புகிறது,” என்று ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்தது.

ஆகஸ்ட் மாதத்தில் அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை கடைசி நிமிடத்தில் தாமதிக்கப்பட்டது.

1எம்டிபி தொடர்பான விசாரணையில் அவரது உதவி தேவைப்படுவதால் அவரை மலேசியாவுக்குக் கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வாஷிங்டனும் புத்ரஜெயாவும் பேச்சு நடத்துவதற்கு ஏதுவாக அவரது தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது.

கோல்ட்மேனின் முன்னாள் தென்கிழக்கு ஆசியத் தலைவரான லீஸ்னர், அமெரிக்க நீதித்துறை வழக்கறிஞர்களுடனான ஒத்துழைப்பு உடன்பாட்டின் ஒரு பகுதியாக குற்றத்தை ஒப்புக்கொண்டு இங்குக்கு எதிராக சாட்சியம் அளித்தார்.

2018ஆம் ஆண்டில் அவர் இருபது மில்லியன் டாலர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இவரது தண்டனையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!