தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் உயர்ந்தன

1 mins read
a373b911-7a7a-4286-b867-4e3c9c8efc24
வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் உயர்ந்தன - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் ஆகப் புதிய ஏலத்தில் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பொதுப் பிரிவுச் சான்றிதழ் கட்டணம் $137,000 ஆக உயர்ந்துள்ளது.

1,600 சிசிக்கும் அதிக ஆற்றல் உள்ள இயந்திரங்களைக் கொண்ட அல்லது 130பிஹெச்பிக்கும் அதிக ஆற்றலைக் கொண்ட வாகனங்கள் 110கிலோவாட்டுக்கும் அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தக்கூடிய மின் வாகனங்களுக்கு உரிய சான்றிதழ் கட்டணம் $129,890லிருந்து $134,889 ஆக 3.85 விழுக்காடு உயர்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிள்களைத் தவிர்த்து மற்ற எல்லா வகை வாகனங்களுக்குமான பொதுப் பிரிவுச் சான்றிதழ் கட்டணம் $131,000லிருந்து $137,000 ஆக உயர்ந்துள்ளது. இது 4.58 விழுக்காடு உயர்வாகும்.

சிறிய, ஆற்றல் குறைந்த கார்களுக்காகவும் மின்சார வாகனங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் ‘ஏ’ பிரிவு சான்றிதழ் கட்டணம் $101,000ல் முடிந்தது. பதினைந்து நாட்களுக்கு முன்பு முந்தைய ஏலத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட இது $1,000 அதிகம்.

வர்த்தக வாகனங்களுக்கான சான்றிதழ் கட்டணம் முன்னைய $82,801ஐ விட 0.11% கூடி $82,889 ஆக இருந்தது.

மோட்டார்சைக்கிள் சான்றிதழ் கட்டணம் மட்டுமே சற்றுக் குறைந்துள்ளது. $11,402ஐ விட 4.39 விழுக்காடு குறைவாக $10,901 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்