என்எஸ் சதுக்க கட்டுமானம் 2027க்குள் நிறைவுபெறும்

மரினா பே மிதக்கும் மேடை உள்ள இடத்தில் என்எஸ் சதுக்கத்திற்கான கட்டுமானப் பணிகள் 2023ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் தொடங்கி 2027ஆம் ஆண்டில் நிறைவடையும்.

மரினா பே மிதக்கும் மேடையை என்எஸ் சதுக்கமாக மறுவடிவமைப்பதற்கான கட்டுமான ஒப்பந்தப்புள்ளி ‘எக்ஸ்பாண்ட் கன்ஸ்ட்ரக்‌ஷன்’ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது என்று தற்காப்பு, தேசிய வளர்ச்சி அமைச்சுகள் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.

முன்னதாக என்எஸ் சதுக்கம் 2025ஆம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொவிட்-19 தொற்றும் அதன் பாதிப்பும் கட்டுமானத்தை 2026 இறுதிக்கு தள்ளியது.

கட்டுமானத்தை எளிதாக்கும் வகையில், மரினா பே மிதக்கும் மேடைக்கு எதிரே உள்ள மரினா புரோமினாட் பகுதி, செப்டம்பர் 6 முதல் நடையர்கள் போக்குவரத்திற்காக மூடப்படும் என, அமைச்சுகள் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

கட்டுமானம் முடியும்வரை ராஃபிள்ஸ் அவென்யூ வழியாக மாற்று நடைபாதை பயன்படுத்த பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அறிக்கை கூறியது.

என்எஸ் சதுக்கத்தில் தேசிய சேவையைக் கருப்பொருளாகக் கொண்ட காட்சியகம், சமூக விளையாட்டு வசதிகள், புதிய பொது நீர்முகப்பு பகுதி ஆகியவை இடம்பெறும்.

எதிர்கால தேசிய தின அணிவகுப்புகள், ரிவர் ஹாங்பாவோ விழாக்கள், மரினா பே புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஆகியவற்றை நடத்த நிரந்தர இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

“புதிய நிரந்தர மேடை ஏறக்குறைய 30,000 பேர் அமரக்கூடியது. மேலும் மேடையைச் சுற்றியுள்ள நீர்முகப்பு ஆண்டு முழுவதும் திறந்திருக்கும். இதனால் நீர்முகப்புப் பகுதியில் நடப்பதற்கான இணைப்பை மேம்படுத்தும்” என்று அமைச்சுகள் கூறின.

2022 அக்டோபர் 14 முதல் 2023 ஜனவரி 19 வரை தற்காப்பு அறிவியல் தொழில்நுட்ப அமைப்பு வெளியிட்ட ஒப்பந்தப்புள்ளியை ‘எக்ஸ்பாண்ட் கன்ஸ்ட்ரக்‌ஷன்’ வென்றது. ஆறு நிறுவனங்களால் மொத்தம் 13 ஒப்பந்தப் புள்ளி விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

“நிதி, பாதுகாப்புத் தரவுகள், திட்டம் மற்றும் அப்பகுதி பற்றிய புரிதல், அனுபவம், முன்னைய செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆறு நிறுவனங்களும் தரவரிசைப்படுத்தப்பட்டன,” என்று அமைச்சுகள் தெரிவித்தன.

இதில் ‘எக்ஸ்பாண்ட் கன்ஸ்ட்ரக்‌ஷன்’ தேர்வு பெற்றது. மரினா நீர்முகப்பைச் சுற்றியுள்ள பகுதியில் கடல் பணிகளில் அது சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. மேலும் மரினா பே நீர்முகப்பு, எஸ்பிளனேட் போன்ற திட்டங்களை நிறைவு செய்துள்ளது என்று அமைச்சுகள் கூறின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!