லீ சியன் யாங் ஃபேஸ்புக்வழி நீதிமன்ற ஆவணங்கள்

1 mins read
dfcc9b6a-ddd1-4186-a0db-a6c33b5d981b
லீ சியன் யாங் - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ரிடவுட் சாலையில் உள்ள இரண்டு பங்களாக்களை வாடகைக்கு எடுத்தது தொடர்பாக திரு லீ சியன் யாங்கின் கருத்துகளுக்காக அவதூறு வழக்குத் தொடரும் அமைச்சர்கள் கா. சண்முகம், விவியன் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் அவருக்கு நீதிமன்ற ஆவணங்களை வழங்க விண்ணப்பித்துள்ளனர்.

தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பெற்ற நீதிமன்ற ஆவணங்களில், பிரிட்டனில் தனிப்பட்ட முறையில் திரு லீ மீதான நீதிமன்ற ஆவணங்களை வழங்குவது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பதால் இரண்டு அமைச்சர்களுக்காகச் செயல்படும் வழக்கறிஞர்கள் விண்ணப்பம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

தவிந்தர் சிங் சேம்பர்ஸைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், “பேஸ்புக் மெசஞ்சரின் மாற்று சேவையானது நீதிமன்ற ஆவணங்களை பிரதிவாதியின் கவனத்திற்கு கொண்டு வருவதில் பயனுள்ளதாக இருக்கும்” என்றும் கூறினார்.

மாற்று சேவை என்பது நீதிமன்ற ஆவணங்களை நேரில் வழங்குவதற்கான முயற்சிகள் தோல்வியுற்றால், அவற்றை வழங்கும் முறைகளைக் குறிக்கிறது.

நேரில் தொடர்புகொள்ள முடியாத பிரதிவாதிகளுக்கு பேஸ்புக், ஸ்கைப் அல்லது இணைய செய்தி தளங்கள் மூலம் நீதிமன்ற ஆவணங்களை வழங்கலாம் என்று உயர்நீதிமன்றம் 2016ல் தீர்ப்பளித்தது.

சட்ட, உள்துறை அமைச்சர் சண்முகமும், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் ஆகஸ்டு 2ஆம் தேதி திரு லீக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக அவதூறு வழக்குகளைத் தொடர்ந்தனர்.

குறிப்புச் சொற்கள்