கட்டுரைக்கு இட்டுச் செல்லும் இணைய விளம்பரத்தில் பிரித்தம் சிங் படம்

கட்டுரைக்கு இட்டுச் செல்லும் இணைய விளம்பரத்தில் பிரித்தம் சிங் படம்

1 mins read
e43c6bc2-86ea-4a36-947c-d1873f13b0e1
அந்த விளம்பரம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக மட்டும் கூகல் நிறுவனப் பேச்சாளர் கூறினார். - படம்: ARMSBEN

சிங்கப்பூரின் எதிர்த்தரப்புத் தலைவரும் பாட்டாளிக் கட்சி தலைமைச் செயலாளருமான பிரித்தம் சிங்கின் பெயரும் படமும் இடபெற்றுள்ள ஒரு விளம்பரம் இணையத்தில் காணப்பட்டு உள்ளது.

அது ஒரு கட்டுரைக்கு இட்டுச் செல்கிறது.

இது, பிரதமர் லீ சியன் லூங்கின் படத்தையும் பெயரையும் உள்ளடக்கி இருந்த முந்தைய மோசடியில் இடம் பெற்ற ஒன்றைப் போன்றதாக இருக்கிறது.

பிரித்தம் சிங்கின் படம் இடம்பெற்றுள்ள விளம்பரம், ஓர் செய்தி ஊடகத்தின் பிரதான பக்கத்தின் மேல் பகுதியில் தென்பட்டது.

அந்த விளம்பரத்தின் மேலே வலது பக்க மூலையில் இருந்த அடையாளச் சின்னத்தைத் தொட்டபோது கூகல் விளம்பரம் என்று வாசகம் இருந்தது.

விளம்பரத்தைப் பார்க்க முயன்ற போது அது ஒரு கட்டுரைக்கு இட்டுச் சென்றது.

‘சிறப்பு அறிக்கை: பிரித்தம் சிங்கின் ஆகப்புதிய முதலீடு அரசாங்கத்தையும் பெரும் வங்கிகளையும் பயமுறுத்தி இருக்கிறது’ என்ற தலைப்பிலான அந்தக் கட்டுரையில் பிரித்தம் சிங்கின் படமும் இடம்பெற்று இருந்தது.

அந்தப் பக்கம், உள்ளூர் செய்தி இணையத்தளமான சிஎன்ஏவின் சின்னத்துடன் அதைப் போன்றதாகத் தெரிந்தது. இருந்தாலும் முகவரி வேறாக இருந்தது.

இதன் தொடர்பில் கேட்டதற்குப் பதில் அளித்த கூகல் நிறுவனப் பேச்சாளர், அந்த விளம்பரம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக மட்டும் கூறினார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்