தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எட்டு மணி நேரம் எஸ்ஐஏ விமானத்திலேயே காத்திருந்த பயணிகள்

1 mins read
d4b5ff1f-1852-40dc-b48b-c90765eee839
பயணிகள் செப்டம்பர் 7ஆம் தேதி விடிகாலை 12.30 மணிக்கு விமானத்தில் இருந்து இறங்கினர். அவர்களுக்கு ஹோட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பேச்சாளர் தெரிவித்தார். - படம்: சீ யாங் சாரா கோ

சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து சிங்கப்பூருக்குப் புதன்கிழமை புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானப் பயணிகள் கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் விமானத்திலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதே அதற்கான காரணம்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எஸ்கியூ833 விமானம் ஷாங்காய் விமான நிலையத்தில் இருந்து புதன்கிழமை பிற்பகல் 4.50 மணிக்குப் புறப்பட்டு இரவு சுமார் 10.20 மணிக்கு சிங்கப்பூரில் தரையிறங்கவிருந்தது.

ஆனால், ஷாங்காய் விமான நிலையத்தில் நின்றிருந்த போதே விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு தெரியவந்தது.

விமானத்தில் இருந்த பயணிகளுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டன. தொடர்ந்து அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.

விமானத்தில் இருந்த பயணிகள் புதன்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு விமானத்தில் இருந்து இறங்கி ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவரும் வேறு விமானம் மூலம் ஷாங்காய் இருந்து புறப்பட்டனர் என்று எஸ்ஐஏ பேச்சாளர் ஒருவர் கூறினார்.

பயணிகளுக்கு ஏற்பட்ட சங்கடத்திற்காக அந்தப் பேச்சாளர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்