சிங்கப்பூரின் பெருமைமிகு நிகழ்வான ‘எஃப்1’ கார் பந்தயத்துக்காக சில சாலைகள் மூடப்படுகின்றன.
இவ்வாண்டு ஃபார்முலா ஒன் கார் பந்தயம் செப்டம்பர் 15ஆம் வெள்ளிக் கிழமை தொடங்கி செப்டம்பர் 17ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை வரை நடைபெறுகிறது.
ஆனால் செப்டம்பர் 13ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை தளவாட வசதிகளை அமைப்பதற்கும், அகற்றுவதற்கும் வசதியாக தொடர்ச்சியாக சில சாலைகள் மூடப்பட்டிருக்கும் என்று சிங்கப்பூர் காவல்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ‘OneMotoring’ இணையதளத்தில் மேல் விவரங்களை அறிந்துகொள்ளலாம் என்று அறிக்கை கூறியது.
நிக்கல் ஹைவே, ரிபப்ளிக் அவென்யூ, தெமாசெக் அவென்யூ, பேஃபிரண்ட் அவென்யூ, ராஃபிள்ஸ் அவென்யூ, ராஃபிள்ஸ் லிங்க், எஸ்பிளனேட் டிரைவ், ஃபுல்லர்ட்டன் ரோடு, பார்லிமெண்ட் பிளேஸ், கன்னாட் டிரைவ், செயின்ட் ஆண்ட்ருஸ் ரோடு, கோல்மேன் ஸ்திரீட் உள்ளிட்ட சாலைகளில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட நாள்களில் சாலைப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளன.

