சிங்கப்பூர் காவல்துறை, தனித்தனியான இரண்டு சாலை விபத்துகள் பற்றி புலன்விசாரணை நடத்தி வருகிறது.
அந்த விபத்துகள் வியாழக்கிழமை நிகழ்ந்தன. அவற்றில் பாதிக்கப்பட்ட மூன்று பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 64க்குச் செல்லும் ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 63 சந்திப்பில் இரவு 7.40 மணிக்கு ஒரு மோட்டார்சைக்கிளும் ஒரு காரும் விபத்தில் சிக்கின.
மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த 51 வயது ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள், பிரேடல் ரோடு புறவழிக்குச் செல்லும் துணைச்சாலையில் விபத்துக்குள்ளாயின.
இந்த விபத்தை அடுத்து 66 வயது கார் ஓட்டுநர் ஒருவரும் 44 வயது பெண் பயணி ஒருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இரண்டு சாலை விபத்துகள் பற்றி காவல்துறை புலன்விசாரணை தொடர்ந்து நடக்கிறது.

