பதின்ம வயது ஆண் ஒருவன் 2020ஆம் ஆண்டில் தனது 11 வயது சகோதரியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியபோது அவனுக்கு வயது 14 மட்டுமே.
குறைந்தது இரண்டு வாரங்களுக்கு கற்பழிக்க முயன்றது உள்ளிட்ட பாலியல் துன்புறுத்தல் செயல்களை அவன் புரிந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 17 வயது பூர்த்தியான அவன், அச்சிறுமியைக் கற்பழித்ததன் தொடர்பில் தன்மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை திங்கட்கிழமையன்று ஒப்புக்கொண்டான்.
தீர்ப்பு வழங்கப்படும்போது, மற்ற இரண்டு குற்றச்சாட்டுகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
சகோதரியின் அடையாளத்தைப் பாதுகாக்க, அந்தப் பதின்ம வயது ஆணின் பெயர் வெளியிடப்படவில்லை.
2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி பாலியல் துன்புறுத்தல் செயல்கள் தொடங்கியதாக அரசாங்கத் தரப்புத் துணை வழக்கறிஞர் கிளேடிஸ் லிம் கூறினார்.
அவன், தெம்பனிசில் உள்ள வீட்டின் படுக்கையறையில் உறங்கிக்கொண்டிருந்த சகோதரியைக் கற்பழித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கும் மே மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் மற்றொரு முறை அவன் தனது சகோதரியைக் கற்பழிக்க முயன்றபோது அவள் அவனைத் தள்ளிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
குற்றச்செயல்கள் எவ்வாறு வெளிச்சத்துக்கு வந்தன என்பதை நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கவில்லை. ஆனால் 2022ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு அவற்றின் தொடர்பில் காவல்துறையிடம் புகார் செய்தது.
குற்றவாளிக்கு அக்டோபர் 30ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

