நியூயார்க் பங்குச் சந்தைப் பட்டியலில் சேர ‘ரைடு’ முயற்சி

சிங்கப்பூரில் வாடகை கார் சேவை வழங்கும் ‘ரைடு’ நிறுவனம், நியூயார்க் பங்குச் சந்தைப் பட்டியலில் சேர முயற்சி செய்து வருகிறது.

சிங்கப்பூர் நிறுவனமான ‘ரைடு’, பங்குகளை வெளியிட்டு கிட்டத்தட்ட 23 மில்லியன் வெள்ளி திரட்ட திட்டமிட்டுள்ளது.

இருப்பினும், அதன் பங்குகளின் விலை குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

முதலீட்டு வங்கியான ‘மேக்சிம் குரூப்’ இந்த ஒப்பந்தத்தை மேற்பார்வையிடுகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘ரைடு’ நிறுவனம், 2022ஆம் ஆண்டு அந்த நிறுவனம் 8.8 மில்லியன் வெள்ளி வருவாய் ஈட்டியது.

இருப்பினும் அந்நிறுவனம் 2022ஆம் ஆண்டு 5 மில்லியன் வெள்ளி நட்டத்தை எதிர்கொண்டது, அதற்கு மு ந்தைய ஆண்டு 1.2 மில்லியன் வெள்ளி நட்டத்தை சந்தித்தது.

தற்போது ரைடு நிறுவனத்தின் வர்த்தகம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்துவருகிறது. அந்த நிறுவனத்தில் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!