தோல் சுருக்கநீக்க சிகிச்சையால் பார்வை இழந்த மாது

தோல் சுருக்கநீக்க சிகிச்சையால் பார்வை இழந்த மாது

1 mins read
049b95ff-8b9a-43ac-b6e9-58f733eccff5
படம்: - ஐஸ்டாக்

கண்களுக்குக் கீழ் உள்ள தோல் சுருக்கத்தைத் தற்காலிகமாகக் குறைக்கும் சிகிச்சை எடுத்த மாதுக்கு கண் பார்வை பறிபோனது.

அவர் ஜூலை மாதம் ரெட்ஹில்சில் உள்ள ஒரு மருந்தகத்தில் அந்த சிகிச்சை மேற்கொண்டார்.

சிங்கப்பூரில் இம்மாதிரியான சிகிச்சை மேற்கொண்டு ஒருவர் பார்வை இழந்திருப்பது இதுவே முதல்முறை.

இம்மாதிரியான சிகிச்சைகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் ‘பர்வஸ்’ இச்சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுடன் அணுக்கமாகச் செயல்பட்டு வருவதாகவும் அது தெரிவித்தது.

சம்பவம் குறித்து சுகாதார அறிவியல் ஆணையம் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்தது.

இம்மாதிரியான நிகழ்வுகள் தைவானிலும் ஆஸ்திரேலியாவிலும் நடந்துள்ளன.

2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் கண்களுக்குக் கீழ் உள்ள தோல் சுருக்கத்தைத் தற்காலிகமாக குறைக்கும் சிகிச்சை மேற்கொண்டு கிட்டத்தட்ட 100 பேர் பார்வை இழந்தனர்.

குறிப்புச் சொற்கள்
சிகிச்சை