கிண்டர்லாண்ட் என்ற பாலர்பள்ளி கல்வி நிறுவனம் சிங்கப்பூரில் 10க்கும் மேற்பட்ட கிளைகளை நாடு முழுவதும் நடத்தி வருகிறது.
அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு பாலர்பள்ளியில் லின் மின், 33, என்பவர் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார்.
சிங்கப்பூரரான அந்த ஆசிரியை, கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி பிற்பகல் 4 மணிக்குச் சற்று முன்னதாக, தான் வேலை பார்த்த பாலர்பள்ளியில் 23 மாத பெண் குழந்தையின் வாயில் வெந்நீரை ஊற்றியதாகக் கூறப்படுகிறது.
அந்த மாது மீது ஆகஸ்ட் 30ஆம் தேதி குற்றம் சுமத்தப்பட்டது. இந்தச் சம்பவம் பற்றியோ இதில் பாதிக்கப்பட்ட குழந்தைப் பற்றியோ எந்த விவரத்தையும் தெரிவிக்கக் கூடாது என்பது உத்தரவு.
இந்த நிலையில், அந்த ஆசிரியை மேலும் ஒரு குற்றச்சாட்டை எதிர்நோக்கக் கூடும் என்று அரசினர் தரப்பு வழக்கறிஞர் புதன்கிழமை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
லிம் மின் மருத்துவ பரிசோதனைக்காக ஏற்கெனவே மனநலக் கழகத்தில் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டார். அவர் புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய $15,000 பிணை அனுமதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட குழந்தையோடு அல்லது சாட்சியங்களோடு அந்த மாது தொடர்பு கொள்ளக்கூடாது;
தொடர்புடைய செய்திகள்
புலன் விசாரணை அதிகாரிகள் எப்போது அழைத்தாலும் அவர்களுக்குச் செவிசாய்த்து பதில் சொல்ல வேண்டும் என்பது நிபந்தனை.
புலன்விசாரணை தொடர்வதாகவும் அரசினர் தரப்பு தெரிவித்தது.

