2வது காலாண்டில் வேலைவாய்ப்புகள் குறைந்தன

சிங்கப்பூரில் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வேலைவாய்ப்புகள் குறைந்தன. ஊழியர்களுக்கான தேவை குறைந்தது.

ஜூலையில் வேலையின்மை விகிதம் கூடியது. ஒட்டுமொத்த வேலையின்மை ஜூலையில் 2%ஆக இருந்தது. இது ஜூன் மாதம் 1.9%ஆக நிலவியது.

சிங்கப்பூரர்களைப் பொறுத்தவரை இந்த விகிதம் ஜூலையில் 2.9%. ஜூனில் இது 2.8% என்று மனிதவள அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

குடிமக்கள், நிரந்தரவாசிகள் அடங்கிய சிங்கப்பூர்வாசிகளைப் பார்க்கையில் இந்த விகிதம் ஜூன் மாதம் 2.7%ஆக இருந்தது. ஜூலையில் 2.8%ஆகக் கூடியது.

என்றாலும்கூட சிங்கப்பூர்வாசிகளைப் பொறுத்தவரை அவர்களின் நீண்டகால வேலையின்மை விகிதம் கொஞ்சம் குறைந்து ஜூனில் 0.5% ஆக இருந்தது. இது மார்ச்சில் 0.6% ஆக நிலவியது.

மனிதவள அமைச்சு வியாழக்கிழமை ஏப்ரல் முதல் ஜூன் வரைப்பட்ட காலாண்டிற்கான புள்ளிவிவரங்களை வெளியிட்டது.

குறைந்தபட்சம் 25 வார காலம் வேலையின்றி இருந்த சிங்கப்பூர்வாசிகளின் வேலையின்மை விகிதத்தை இது காட்டுகிறது.

இதனிடையே, வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து ஐந்தாவது காலாண்டாக சரிந்து ஜூனில் 87,900 ஆகக் குறைந்தது. இது மார்ச்சில் இருந்த அளவுடன் ஒப்பிடுகையில் 12% குறைவு.

கொவிட்-19க்குப் பிறகு 2022 மார்ச்சில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை உச்சத்தில் 126,000ஆக இருந்தது.

வேலைவாய்ப்புகளில் ஐந்தில் சுமார் ஒன்று நிபுணத்துவச் சேவைகளில், தகவல், தொடர்பு நிதிச் சேவைத்துறைகளில் இருந்தது.

வேலைவாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் வேலையில்லாதவர்களில் ஒவ்வொருவருக்கும் கிட்டத்தட்ட இரண்டு வேலைகள் இருந்தன.

வேலையில்லாமல் இருந்த ஊழியருக்கும் கிடைத்த வேலைகளுக்கும் இடைப்பட்ட விகிதம் ஜுனில் 1.94ஆகக் குறைந்தது. இது மார்ச்சில் 2.28ஆக இருந்தது.

சிங்கப்பூரின் ஒட்டுமொத்த வேலைநியமனம் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் விரிவடைந்தது. இருந்தாலும் அதன் வேகம் குறைவாக இருந்தது.

இரண்டாவது காலாண்டில் வேலை பார்த்த ஊழியர்கள் எண்ணிக்கை 24,300 அதிகரித்தது. என்றாலும் இந்த அதிகரிப்பு, முந்தைய காலாண்டைவிட (33,000) குறைவாகும்.

இந்த ஆண்டின் 2வது காலாண்டில் வேலையில் இருந்த வெளிநாட்டினர் எண்ணிக்கை 25,500 அதிகரித்தது.

அதேவேளையில், வேலையில் இருந்த சிங்கப்பூர்வாசிகளின் எண்ணிக்கை 1,200 குறைந்தது. ஜூனில் மொத்த வேலை நியமனங்கள் 3,680,000ஆக இருந்தது.

இதில் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் சேர்க்கப்படவில்லை.

இந்த ஆண்டின் 2வது காலாண்டில் ஆட்குறைப்பு குறைந்தது. ஏப்ரல் முதல் ஜூன் வரைப்பட்ட காலத்தில் சுமார் 3,200 பேர் ஆட்குறைப்புக்கு ஆளாயினர். இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய காலாண்டில் 3,820ஆக இருந்தது.

தகவல், தொடர்புத்துறையில்தான் ஆட்குறைப்புகள் அதிகமாக இருந்ததாக அமைச்சு தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!