முகம், வாயில் ஒட்டுத்தாள் ஒப்பனை; ஆபத்தாகலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கை

முகம், வாயில் ஒட்டுத்தாள் ஒப்பனை; ஆபத்தாகலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கை

1 mins read
52903bee-dc26-4d35-90dc-c4ee5aba0605
புதிய வகை ஒட்டுத்தாள் பாணியை @isabelle.lux (இடது) என்ற டிக்டாக் பிரபலம் பரிசீலித்து பார்க்கிறார். அந்தப் பாணியை @itzamelika. என்பவரைப் போன்ற இணைய வாசிகள் பலரும் மெச்சுகிறார்கள். - படம்: டிக் டாக் 

முகத்தில் சுருக்கங்களைப் போக்கி இளமைத் தோற்றத்துடன் திகழவும் தூங்கும்போது வாயை மூடித் தூங்கவும் முகத்தின் நெற்றி, கன்னம் போன்ற பகுதிகளிலும் வாயிலும் ஒரு வகை ஒட்டுத்தாளை ஒட்டிக்கொண்டு தூங்கும் ஒரு பாணி இப்போது அனைத்துலக அளவில் பிரபலமடைந்து வருகிறது.

ஆனால், அத்தகைய செயல்களால் ஆபத்து ஏற்படக்கூடும் என்று வல்லுநர்கள் எச்சரித்து இருக்கிறார்கள்.

முகத்தில் ஒரு வகை ஒட்டுத்தாளை ஒட்டிக்கொண்டு அதன்மூலம் முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி, முதுமை தோற்றத்தைத் தவிர்த்துக்கொண்டு இளமைத் தோற்றத்துடன் திகழ அனைத்துலக அளவில் ஒரு ஒப்பனை பாணி இப்போது தலைதூக்கி வருகிறது.

அத்தகைய ஒட்டுத்தாள்கள் முகத்தில் சுருக்கம் விழுவதைத் தடுப்பதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால், இத்தகைய ஒப்பனை முறை ஆபத்தானது என்று வல்லுநர்கள் எச்சரித்து உள்ளனர்.

அத்தகைய ஒப்பனை சிகிச்சைகளால் நீண்டகாலப் போக்கில் நன்மை இருப்பதாகத் தெரியவில்லை என வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

குறிப்புச் சொற்கள்