தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சில்லு வர்த்தகத் துறையில் நிலவும் தடைகளை அகற்ற சிங்கப்பூர் ஆதரவு

1 mins read
587d7212-c7dd-40a7-a134-29ab76444186
உலகின் ஒட்டுமொத்த குறைகடத்திச் சில்லுகளில் சுமார் 12%, சிங்கப்பூரிலுள்ள சில்லுத் தயாரிப்பு நிறுவனங்கள் என்று சிங்கப்பூர் குறைகடத்தித் தொழில்துறைக் கழகம் தெரிவித்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெனிவா: இவ்வாரம் நடக்கவுள்ள உலக வர்த்தக மன்றத்தின் பொதுக் கருத்தரங்கிற்காக பேராளர்கள் ஜெனிவா நகரில் கூடியுள்ளனர்.

இந்நிலையில், பசுமைத் தொழில்நுட்பங்களுக்கு உதவக்கூடிய குறைகடத்தி போன்ற பாகங்கள், இதர தகவல்தொடர்பு தொழில்நுட்பப் பொருள்கள் ஆகியவற்றின் வர்த்தகம் தொடர்பான கட்டுப்பாடுகளைக் குறைத்துக்கொள்ளுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறைகடத்தி வர்த்தகம், நீடித்த நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் அதன் பங்கு ஆகிய அம்சங்கள் தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அமெரிக்க லாபி குருப் குறைகடத்தித் தொழில்துறைக் கழகத்தின் தலைவர் ஜான் நியூட்டர் பேசினார். பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க உதவும் பசுமைத் தொழில்நுட்பங்களையும் புத்தாக்கப் படைப்புகளையும் முடுக்கிவிடும் ஆற்றல் கொண்டவை சில்லுகள் என்று அவர் குறிப்பிட்டார்.

எரிசக்திச் செயல்திறனுடைய தரவு மையங்கள் மற்றும் கட்டடங்கள், மின்சார வாகனங்கள், சூரியத் தகடுகள், முப்பரிமாண அச்சு இயந்திரங்கள் போன்றவை அத்தகைய ஆற்றலுடையவை என்று அதற்குச் சான்றும் காட்டினார்.

அனைத்துலகத் தொழில்நுட்ப விநியோகச் சங்கிலியில் பல நாடுகளையும் நிறுவனங்களையும் கொண்டுவரும் சாத்தியம், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தகவல்தொடர்புத் தொழில்நுட்பத் துறைகளின் கட்டணங்களைக் குறைப்பதைப் பொறுத்து உள்ளது என்றும் அவர் கூறினார்.

இதனால், பொருள்களின் விலை குறையும். அத்துடன், வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றார் திரு நியூட்டர்.

குறிப்புச் சொற்கள்