செப்டம்பர் பிற்பாதியில் இடியுடன் மழை

1 mins read
de7c4ee7-d025-455e-bc55-212f3c23b9fc
செப்டம்பர் மாத பிற்பாதியில் பெரும்பாலான நாள்களில் நாட்டின் பல பகுதிகளிலும் காலையில் பின்நேரத்திற்கும் பிற்பகலுக்கும் இடையில் விட்டு விட்டு இடியுடன் மழை பெய்யக்கூடும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

சிங்கப்பூரில் செப்டம்பர் முற்பாதியைவிட பிற்பாதியில் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாதத்தின் முதல் 15 நாள்களைவிட அடுத்த 15 நாள்களில் இடியுடன் கூடிய மழை அதிகம் பெய்யும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

பெரும்பாலான நாள்களில் பல பகுதிகளிலும் காலை பின்னேரத்திற்கும் பிற்பகலுக்கும் இடையில் இடியுடன் கூடிய மழை விட்டுவிட்டு பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இப்போது நிலவும் தென்மேற்குப் பருவமழை சிங்கப்பூரிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் முக்கியமாக தென்கிழக்கில் இருந்து அல்லது தென்மேற்கில் இருந்து இலேசாகக் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு நிலையம் கூறியுள்ளது.

மொத்தமாகப் பார்க்கையில், செப்டம்பரின் பிற்பாதியில் சராசரிக்கும் அதிகமாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்தாலும், பெரும்பாலான நாள்களில் அன்றாட அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் முன்னுரைக்கப்பட்டு உள்ளது. ஒரு சில நாள்களில் வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் வரை போகக்கூடும் என்றும் வானிலை நிலையம் கணித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்