இணையத்தளம் முடக்கம்

1 mins read
3737dd61-c973-46bf-a855-6c0407659a6c
கிழக்காசிய கருத்தரங்கம் என்ற இணையக் கல்வித் தளத்திற்கு செப்டம்பர் 13ஆம் தேதி பொஃப்மா அலுவலகம் ஒரு கட்டுரை தொடர்பில் திருத்த உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. - படம்: கிழக்கு ஆசிய கருத்தரங்கம் இணையத்தளம்  

சிங்கப்பூரில் கிழக்காசிய கருத்தரங்கம் என்ற இணையக் கல்வித் தளத்தை எட்டுவதற்கான பாதை அடைக்கப்பட்டு இருக்கிறது.

அந்தக் கல்வித் தளத்திற்கு இந்த வாரத் தொடக்கத்தில் பொஃப்மா அமைப்பு ஒரு கட்டுரை தொடர்பில் திருத்த உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. ஆனால், அதற்கு அந்த அமைப்பு கீழ்படியவில்லை.

அதனையடுத்து அதை எட்டுவதற்கான பாதை அடைக்கப்பட்டுவிட்டது.

திருத்த உத்தரவை முற்றிலும் நிறைவேற்றும் பட்சத்தில் அந்தத் தடை அகற்றப்படும் என்று தொடர்பு, தகவல் அமைச்சு சனிக்கிழமை தெரிவித்தது.

இதனிடையே, கிழக்காசிய கருத்தரங்கம் அமைப்பின் இணையத்தளத்தை எட்டுவதற்கு சனிக்கிழமை பிற்பகல் நேரத்தில் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பது தெரியவந்தது.

குறிப்புச் சொற்கள்