சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வுகளில் சிங்கப்பூரின் வரலாற்றைக் கூறும் சுவரோயவிமும் ஒன்று.
தஞ்சோங் பகார் எம்ஆர்டி நிலையத்தில் வரையப்பட்டுள்ளத ‘சித்திரத்தில் சிங்கப்பூர்’ என்ற தலைப்பிலான 67 மீட்டர் நீள 1.7 மீட்டர் உயர சுவரோவியத்தை பிரதமர் அலுவலக அமைச்சரும் தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான குமாரி இந்திராணி ராஜா திறந்து வைத்தார்.
கண்ணைக் கவரும் இந்த ஓவியத்தை இங் பெங் சிங், 69, என்ற ஓவியர் 22 மாத காலம் பாடுபட்டு வரைந்து இருக்கிறார்.
இந்த ஓவியம் சிங்கப்பூரின் வரலாற்றின் முக்கியமான நிகழ்ச்சிகளையும் பிரபலங்களையும் சித்திரிக்கிறது.
அது குறைந்தபட்சம் ஓராண்டு காலத்திற்கு அந்த நிலையத்தில் காட்சிக்கு இருக்கும்.

