ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயில் சனிக்கிழமை பிற்பகல் நேரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 49 வயது ஆடவர் மாண்டார்.
அவர் மோட்டார்சைக்கிளில் சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது வாகனம் சறுக்கிக்கொண்டு விபத்துக்குள்ளாகிவிட்டதாக காவல்துறை தெரிவித்தது.
வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்த அந்த ஆடவர், கீழே விழுந்து அடிபட்டு அதே இடத்தில் மாண்டுவிட்டார்.
மோட்டார்சைக்கிள் சறுக்கிக்கொண்டு தாறுமாறாக ஓடி ஒரு காரின் மீது மோதிவிட்டதாகவும் தெரியவந்தது.
இதனிடையே, புலன்விசாரணையில் 65 வயது கார் ஓட்டுநர் ஒருவர் உதவி வருவதாக காவல்துறை தெரிவித்தது.