தெம்பனிஸ் ஸ்திரீட் 11 புளோக் 139ல் ஒரு வாகனமும் நடையர் ஒருவரும் சம்பந்தப்பட்ட விபத்து சனிக்கிழமை பிற்பகல் சுமார் 4.20 மணிக்கு நிகழ்ந்தது.
அதில் 60 வயது மாது ஒருவரின் கால்கள் ஒரு வாகனத்தின் கீழ் சுமார் 20 நிமிடம் மாட்டிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த மாது சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தை ஓட்டி வந்த 61 வயது ஆடவர் புலன்விசாரணையில் உதவி வருவதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.
இந்த விபத்து பற்றி காவல்துறையின் புலன்விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த விபத்தைக் காட்டும் புகைப்படங்கள் சாவ் பாவ் நாளிதழுக்கு அனுப்பப்பட்டன.
விபத்தில் சிக்கி காயம் அடைந்த மாது தான் வசிக்கும் அதே புளோக்கில் வசிப்பவர் என்று 47 வயது மாது ஒருவர் சாவ் பாவ் செய்தித்தாளிடம் தெரிவித்தார்.
அந்த 47 வயது மாது சம்பவம் நிகழ்ந்த இடத்திற்குச் சென்றபோது அங்கு வாகனத்தின் கீழே கால்கள் சிக்கிக்கொண்ட நிலையில் மாது இருந்ததைப் பார்த்தார்.
தொடர்புடைய செய்திகள்
அந்த மாது வாகனத்தின் கீழே 20 நிமிட நேரம் சிக்கிக்கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர் என்று சாவ் பாவ் கூறியது.