சிங்கப்பூர் அரசாங்கம், வெளிநாட்டில் வாழும் சிங்கப்பூரர்கள் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்காக முதல் முயற்சியை எடுத்திருந்தது.
இதில், 2,263 வாக்குகள் செப்டம்பர் 11ஆம் தேதி காலக்கெடுவுக்குள் வந்துசேர்ந்தன. இருந்தாலும் அவற்றில் 918 வாக்குகள் (ஐந்தில் இரண்டு வாக்குகள்) ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று தேர்தல் துறை தெரிவித்தது.
தபால் வாக்குகளின் உறைகள் கிழிந்திருந்தது, மூடப்படாமல் இருந்தது, திறந்திருந்தது, தெளிவற்று இருந்தது போன்றவை, அந்த வாக்குகள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் என்று தேர்தல் துறை விளக்கியது.
எஞ்சிய 1,345 வாக்குகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன என்று அது கூறியது.

