வாக்காளர் அட்டைகளை அச்சிடும் நடைமுறைக்கு கூடுதல் கட்டுப்பாடு

வாக்காளர் அட்டைகளை அச்சிடும் நடைமுறைக்கு கூடுதல் கட்டுப்பாடு

1 mins read
f701a7c7-798d-48fd-813a-5230d6536c36
படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடும் ஒப்பந்த நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளை அதிகரிக்கிறது தேர்தல் துறை.

வேலையின் தரம் சரியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்த அதிபர் தேர்தலுக்கு தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் இருந்த 9,822 வாக்காளர்களுக்கு இரண்டு வாக்காளர் அட்டைகள் வழங்கப்பட்டன.

எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்கவும் சோதனை முயற்சிக்காக அச்சிடப்பட்ட வாக்காளர் அட்டைகள் வாக்காளர்களுக்கு அனுப்பப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சரும் பொதுச் சேவைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான சான் சுன் சிங் நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை தெரிவித்தார்.

தேர்தலுக்காக அட்டைகள் அச்சிடுவதற்கு முன்னர் சோதனை முயற்சிக்காக அச்சிடப்பட்ட வாக்காளர் அட்டைகள் சரியாக அப்புறப்படுத்தப்பட்டதா என்பதும் சரிபார்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.

எத்தனை வாக்காளர் அட்டைகள் அச்சிடப்படுகின்றன, தொகுதி வாரியாக வாக்காளர்கள் பட்டியலில் உள்ளவர்களுக்குச் சரியாக அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளதா என்பதும் சரிபார்க்கப்படும் என்றும் அமைச்சர் சான் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்