கவிமாலை வழங்கும் சிறந்த கவிதை நூலுக்கான தங்கப்பதக்க விருது

கவிமாலை வழங்கும் சிறந்த கவிதை நூலுக்கான தங்கப்பதக்க விருது

படம்: தமிழ் முரசு

18 Sep 2023 - 5:25 pm

1 mins read

ஆண்டுதோறும் சிங்கப்பூரில் வெளியிடப்படும் சிறந்த கவிதை நூலுக்கு ‘வெண்பா சிற்பி’ இக்குவனம் அவர்களின் நினைவாக அவருடைய புதல்வர் மருத்துவர் சாமிநாதன் இல்லத்தார் ஆதரவுடன் தங்கப்பதக்க விருது வழங்கி சிங்கப்பூர்க் கவிஞர்களை ஊக்கப்படுத்தி வருகிறது கவிமாலை.

கடந்த 2022 (01 ஜனவரி - 31 டிசம்பர் வரை) முதல் பிரதி அச்சிடப்பட்டு வெளியீடு செய்யப்பட்ட கவிதை நூல்களைப் போட்டிக்கு அனுப்பலாம்.

சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், சிங்கப்பூரில் 10 ஆண்டுகள் தொடர்ந்து வேலை அனுமதி அட்டையில் பணியிலிருப்பவர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறுவர்.

கவிதைகள் எந்தப் பாவினத்தையோ வகையினையோ சேர்ந்தவையாக இருக்கலாம். கவிஞர்கள் தங்கள் கவிதைப் படைப்பை 4 படிவங்கள் எடுத்து, செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அஞ்சல் அல்லது கொரியர் மூலமாகவோ அனுப்பலாம். போட்டியில் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

பரிசுபெறும் நூலுக்கான தங்கப்பதக்கம் நவம்பர் மாதம் கவிமாலை நடத்தும் விழாவில் வழங்கப்படும்.

கவிதை நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி: Blk 9 Bedok South Avenue 2, #03-532, Singapore - 460009.

தொடர்புக்கு: 9226 0035

குறிப்புச் சொற்கள்