இரண்டு வயது மகளை கொன்ற ஆடவருக்கு 21.5 ஆண்டுகள் சிறை

2 mins read
6b14c15b-8510-40d8-bd7a-cbcdd31db0ca
படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

2014ஆம் ஆண்டு போதைப்பொருள் உட்கொண்ட பிறகு தனது இரண்டு வயது மகள் உமைஸ்சாவை வேகமாக அறைந்துள்ளார் 30 வயது ஆடவர். அதில் அந்தக் குழந்தை மாண்டது.

அதன் பிறகு அந்த ஆடவரும் அவரது மனைவியும் பிள்ளையை ஒரு உலோகப் பானையில் வைத்து தீயிட்டனர்.

தடயங்களை மறைக்கும் நோக்கில் இந்தச் செயலில் தம்பதி ஈடுபட்டனர்.

உடல் சாம்பலான பிறகு, பானையில் இருந்த எலும்புகளை ஒரு அட்டை பெட்டியில் வைத்து வீட்டின் சமையல் அறையில் வைத்துள்ளனர்.

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு 2019ஆம் ஆண்டு உறவினர் ஒருவர் அந்த பெட்டியைத் திறந்துள்ளார்.

அதில் இருந்த எலும்புகள் பற்றி அவரது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார், பின்னர் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

செவ்வாய்க் கிழமை நடந்த வழக்கு விசாரணையில் தற்போது 35 வயதான ஆடவருக்கு 21.5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 18 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

ஆடவரின் இந்தச் செயல் கொடூரமானது என்றும் நீதிபதி கூறினார்.

விசாரணையில் ஆடவர் அவரது மகளை பல முறை துன்புறுத்தல் செய்ததும் பிள்ளைக்குத் தேவையான மருத்துவ கவனிப்பு கொடுக்காமல் இருந்ததும் தெரியவந்தது.

அதுபோக ஆடவர் அவரது 6 வயது மாற்றான் மகனையும் துன்புறுத்தியுள்ளார்.

கொலை குற்றத்தை தவிர ஆடவர் மீது துன்புறுத்தல், போதை மருந்து உட்கொண்டல், கலவரத்தில் ஈடுபடுதல் போன்ற குற்றச்சாட்டுகளும் ஆடவர் மீது சுமத்தப்பட்டது.

அந்த குற்றங்களையும் ஆடவர் ஒப்புக்கொண்டார்.

தம்பதி மீது முதலில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டது, அதன் பின்னர் அது நோக்கமில்லா கொலைக் குற்றமாக வகைப்படுத்தி தண்டனை விதிக்கப்பட்டது.

தம்பதிக்கு மேலும் ஐந்து பிள்ளைகள் உள்ளதால் தம்பதியின் பெயர் வெளியிடப்படவில்லை.

தம்பதி 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். மாண்ட பிள்ளையையும் சேர்த்து அவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

அந்த பெண் ஏற்கெனவே நடந்த முதல் திருமணத்தின் மூலம் இரு குழந்தைகள் உள்ளனர்.

ஆடவரின் மனைவி 2021ஆம் ஆண்டு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார், இருப்பினும் எதிர்காலத்தில் தடயங்கள் கிடைத்தால் அவருக்கு தண்டனை விதிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்