பெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு;‘95’ வகை பெட்ரோல் $3ஐத் தொட்டது

பெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு;‘95’ வகை பெட்ரோல் $3ஐத் தொட்டது

1 mins read
2331dd95-05ec-452c-a02c-09c0fddc9d95
கால்டெக்ஸ் பெட்ரோல் நிலையங்களில் 95 ஆக்டேன் ரக பெட்ரோல் $3.03க்கு விற்கப்படுகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பெட்ரோல் விலை கடந்த ஒரு மாதமாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. வாகனமோட்டிகளிடம் பிரபலமான 95 வகை பெட்ரோலின் விலை 3 வெள்ளியைத் தொட்டுள்ளது.

சிங்கப்பூரில் செயல்படும் ஐந்து பிரதான பெட்ரோல் நிலையங்களில் ஒன்றான அமெரிக்காவின் கால்டெக்ஸ் நிறுவனம், திங்கட்கிழமை அன்று ஒரு லிட்டர் ‘95 ஆக்டேன்’ பெட்ரோலை 3.03 வெள்ளிக்கு விற்றது.

இது, ஐந்து வாரங்களுக்கு முன்பிருந்த விலையைவிட 11 காசு அதிகம்.

இதர நான்கு பெட்ரோல் நிறுவனங்களின் நிலையங்களில் பெட்ரோல், டீசல் விலை கடந்த ஐந்து வாரங்களைவிட அதிகரித்துள்ளது. இதில் கால்டெக்ஸ் நிறுவனத்தின் பெட்ரோல் ஆக அதிக விலைக்கு விற்கப்படுவதாக சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் அமைத்துள்ள ‘ஃபியூவல்காக்கி’ எனும் பெட்ரோல் விலை கண்காணிப்புச் செயலி மூலம் தெரியவருகிறது.

தற்போது 92 ஆக்டேன் ரக பெட்ரோல் $2.86 (எஸ்பிசி) முதல் $2.86 (கேல்டேக்ஸ்) வரையிலும் 95 ஆக்டேன் பெட்ரோல் $2.90க்கும்(எஸ்பிசி) $3.30க்கும் (கேல்டெக்ஸ்) இடைப்பட்ட விலையில் விற்கப்படுகிறது.

அதே சமயத்தில் 98 ஆக்டேன் பெட்ரோல் $3.38 (எஸ்பிசி) முதல் $3.46(ஷெல்) வரை விற்கப்படுகிறது.

உலகில் கச்சா எண்ணெய் விலை உயர்வையடுத்து பெட்ரோல் விலையும் அதிகரித்துள்ளது. சவூதி அரேபியாவும் ரஷ்யாவும் பெட்ரோல் உற்பத்தியைக் குறைத்தது மற்றொரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்