சிங்கப்பூரின் முன்னாள் போட்டி நடுவர் கென் லிம் சி சியாங் மீது புதன்கிழமை மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
அது ஒரு மாதை மானபங்கப்படுத்தியது தொடர்பானது. அவர் குற்றச்செயலால் பாதிக்கப்பட்ட ஐந்தாவது நபர் என்று கூறப்படுகிறது.
லிம், 59, இப்போது மொத்தம் ஆறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். அவற்றில் ஐந்து குற்றச்சாட்டுகள் சொல்லால் மானங்கம் செய்தது தொடர்பானவை.
மற்றொன்று செயலால் மானபங்கம் செய்ததாகக் கூறுகிறது.
ஹைப் ரெக்கார்ட்ஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக லிம் இருந்தபோது குற்றச்செயல்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்ப்டடது.
லிம் மீது சுமத்தப்பட்ட ஆகக் கடைசியான குற்றச்சாட்டு, 2012 ஜூலை 25ஆம் தேதி மாலை சுமார்7 மணிக்கு நிகழ்ந்ததாகத் கூறப்படும் ஒரு குற்றச்செயல் தொடர்பானது.
வழக்குக்கு முந்திய கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை நடக்கும்.
லிம் மீது முதன்முதலாக மார்ச் 20ஆம் தேதி மானபங்கம் தொடர்பிலான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஹைப் ரெக்கார்ட்ஸ் அலுவலகத்தில் 2021 நவம்பர் 23ஆம் தேதி, 25 வது மாது ஒருவரை லிம் செயலால் மானபங்கம் செய்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டால் லிம்முக்கு பிரம்படி தண்டனை விதிக்க இயலாது. அவருக்கு வயது 50க்கும் மேல் ஆகிவிட்டதே காரணம்.